தூது சொல்வாயா

என்.கே.வேணி, பலாங்கொடை

கான ரீங்காரம்
செய்யும்
கருவண்டே
நறுமணம் வீசும்
நந்தவனத்தில்
புஷ்பங்களின் எழிலை
ரசித்துக் கொண்டு
தனியாக இருக்கும்
அவனிடம் என்
காதலைச் சொல்வாயா?
துள்ளியெழுந்து
கரையைத் தொட்டு
கரையை தாண்டாமல்
கண்ணியமாக மீண்டு
செல்லும் கடலலையே
கடற்கரை மணலில்
காத்திருக்கும்
அவனிடம் என்
காதலை சொல்வாயா
இயற்கை தாவரங்களை
தாலாட்டும் இனிய
தென்றலே
நீலவானில் வேகமாய்
ஓடும் வெண்முகிலே
தரணிக்கு ஒளி
தரும் தங்கநிலாவே
உன் எழிலில்
மதி மயங்கி
மண்ணில் மல்லாந்து
படுத்து உன்னை
ரசித்துக் கொண்டிருக்கும்
அவனிடம் என்
காதலைச் சொல்வாயா?
மாந் தோப்பிலே
கனிந்திருக்கும்
இனிய கனியை
சுவைக்க ஆவலுடன்
காத்திருக்கும் அவளிடம்
என் காதலை சொல்வாயா
ஆற்றங்கரையிலே ஆவலுடன்
ஒற்றைக்காலில்
செம்மீனை பிடிக்க
காத்திருக்கும் செங்கால் நாரையை
பரவசமாய் பார்த்திருக்கும்
அவனிடம்
என் காதலை செல்வாயா?
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
10 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.