தள்ளிப்போகாதே தந்த வினோதமான அனுபவம்...

சிம்பு நடிப்பில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் பாடலாசிரியை தாமரை இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார், ராசாளி மற்றும் தள்ளிப்போகாதே.
தள்ளிப்போகாதே பாடல் வரிகள் உருவாக்கம் ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு நாள் ரஹ்மான் அனுப்பிய மெட்டை கவுதம் கொண்டு வந்தார். அந்த மெட்டை என்னால் உணர்ந்து கொண்டு வரிகள் எழுதவே முடியவில்லை, சின்ன சின்ன மியூசிக் தான் இருந்தது.
இது ரொம்ப கஷ்டம் கவுதம் என்றேன். அதற்கு கவுதம், ரஹ்மான் இந்த மெட்டை விமானத்திலிருந்து அனுப்பினார், மேலும் நமக்கு நேரம் கிடையாது தாமரை, நான் சூழ்நிலை சொல்கிறேன், அதற்கு ஏற்றார் போல் தாருங்கள் என்றார்.
ஆனால் ரஹ்மான் எப்போதுமே இந்த மாதிரி தான், முழுப்பாடல் உருவான பிறகு பாருங்கள் என்றார். அந்த பாடல் தான் தற்போதைய எல்லா இளைஞர்களின் ரிங்க்டோனாக இருக்கும் தள்ளிப்போகாதே பாடல் என்று கூறியுள்ளார் தாமரை.

தள்ளிப்போகாதே...!!!
எனை நீ தள்ளிப்போகச் சொல்லாதே
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
ஏனோ வானிலை மாறுதே
மணித்துளி போகுதே
மார்பின் வேகம் கூடுதே
மனமோ ஏதோ சொல்ல வார்த்தை தேடுதே
கண்ணெல்லாம்..
நீயேதான்..
நிற்கின்றாய்..
விழியின்மேல் நான் கோபம் கொண்டேன்..
இமை மூடிடு என்றேன்..
நகரும்
நொடிகள்
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே
வரி வரிக் கவிதை..
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்
எனது...!
கடல் போல பெரிதாக நீ நின்றாய்..
சிறுவன் நான்
சிறு அலை மட்டும் தான்
பார்க்கிறேன்... பார்க்கிறேன்..
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று
நான் வந்து நீராடும் நீரூற்று
ஓ.. ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே..
ஓ.. நான் மட்டும் தூங்காமல்
ஏங்கி உன்போல காய்கின்றேன் நிலவே..
கலாபம்
போலாடும்
கனவில் வாழ்கின்றனே..
கை நீட்டி
உன்னைத்
தீண்டவே பார்த்தேன்..
ஏன் அதில் தோற்றேன்.?
ஏன் முதல் முத்தம்
தர தாமதம் ஆகுது.?
தாமரை வேகுது...
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
ஓ.. ஒ ஓ.. ஒ ஓ..
தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே
(தள்ளிப் போகாதே..
எனையும் தள்ளிப் போகாச் சொல்லாதே..
இருவர் இதழும் மலர் எனும் முள்தானே )
தேகம் தடை இல்லை
என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்..
ஆனால் அது பொய் தான்
என நீயும்
அறிவாய் என்கின்றேன்..
அருகினில் வா..
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ.. ஒ ஒ ஓ...
கனவிலே தெரிந்தாய்..
விழித்ததும் ஒளிந்தாய்..
கனவினில் தினம் தினம்
மழைத்துளியாய்ப் பொழிந்தாய்..
கண்களில் ஏக்கம்..
காதலின் மயக்கம்..
ஆனால் பார்த்த நிமிடம் ஒரு விதமான தயக்கம்..
நொடி நொடியாய் நேரம் குறைய..
என் காதல் ஆயுள் கரைய..
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட..
விதியின் சதி விளையாடுதே..
எனை விட்டுப் பிரியாதன்பே..
எனை விட்டுப் பிரியாதன்பே..
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே...
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
1 + 4 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.