நான் ரொம்ப பிஸி!

தினைஞ்சாயிரம் ஸ்கொலஷிப் குடுக்கிறதப்பத்திக் கடந்த வாரம் லைற்றா ரச் பண்ணியிருந்தன். சரியெண்டா அத ஆழமா ரச் பண்ணனும். அவர் செய்ற வேலை கெட்டிக்கார வேலை எண்டும் சிலர் சொல்றாங்க! இல்லையெண்டு யார்தான் சொல்வாங்க! சில பிள்ளைகள வெளிநாட்டுக்கும் கூட்டிக் ெகாண்டு போறதாவும் கதை, ஸ்கொலஷிப்புக்கு. அதேநேரம், தன்னோட ரியுட்டரிய வைச்சு உழைக்கிற வேலையையும் பாக்கிறாராம்! ரியுட்டரிய வைக்கிறது உழைக்கிறத்துக்குத்தானே எண்டு நீங்க சொல்வதும் விளங்குது! கொழும்பிலைதான் அப்பிடியெண்டா, அங்கேயுமா?
கொஞ்சத்தையாவது குடுத்துட்டுச் சுரண்டினாலும் பரவாயில்லை. இஃது ஒரு சதக்காசும் செலவழிக்காம, குடுக்காம, காகிதத்த மட்டும் வைச்சு ஏமாத்துனா சரியா? இதைத்தான் பிழை எண்டு சனம் கதைக்குது! சில நேரம் சிலரை ஏமாத்தலாம்! ஆனால், எல்லா நேரமும் எல்லாத்தையும் ஏமாத்த முடியுமா? இது முனிவர்மாருக்கு மட்டும்தான் சாத்தியமெண்டால், சித்தர்கள் கோவிச்சுக்ெகாள்ளுவாங்க. என்னவோ சனம் விழிப்பாயிட்டுது என்றத மட்டும் சொல்லி வைக்கிறோம், அவ்வளவுதான். அதற்கு மேல உங்கள் பாடு!
புலமைப்பரிசில் பரீட்சையைப் பத்திப் பல விதமான கதைகள் வந்து கொண்டிருக்கு. இந்தப் பரீட்சை நடக்கிற வருஷங்கள்ல, பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலை அந்த வருஷத்திற்குரிய பாடத்திட்டத்தில கவனம் செலுத்திறது குறைவு என்கிறார் ரீச்சர். குறைவு என்றதைவிட அறவே பாடப்புத்தகத்தைத் தொடுவது இல்லை என்றே சொல்றார்.
இஃது ஏன் என்றால், புலமைப்பரிசில் பரீட்சைக்கு வரும் வினாக்கள் வந்து பாடத்திட்டத்திற்குள், பாடப்புத்தகத்திற்குள் உள்ளடங்காதவை என்று சொல்றாங்க. அதனால, அந்தப் பரீட்சைக்கு முகங்கொடுக்கிறத்துக்காகப் பிள்ளைகளப் பாடத்திட்டத்திலை இருந்து விலக்கி வைச்சு, பொது அறிவுப்புத்தகத்தைத் தேடிப் படிப்பிக்க வேண்டிய நிலைமை ஏற்படுது. சில பள்ளிக்கூட அதிபர்மார், எக்ேகடுகெட்டாலும் எனக்குப் பாடத்திட்டத்தை முடிச்சுக்காட்ட வேணும் என்று ரீச்சர்மாருக்குக் கட்டளையிடும்போது, அவங்க ஸ்கொலஷிப்பு விடயத்தைக் கைவிட்டிட்டு, பாடத்திட்டத்திலை கவனம் செலுத்துறாங்களாம். அப்ப அந்தப் பிள்ளை ஸ்கொலஷிப் பரீட்சைக்குப் படிக்க முடியுமா? இஃது ஓர் இடியப்பச் சிக்கல் மாதிரித்தான் கிடக்கு.
இதையெல்லாத்தையும் எங்க போய் கதைப்பது என்று ஒரே அல்லாடலா இருக்கு என்கிறார்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களும்.
உண்மையில் அஞ்சாம் தரம் ஸ்கொலஷிப் என்பது பிள்ளைகளை அஞ்சாம் வகுப்பைப் படிக்க விடுறது இல்லை. வகுப்பைப் படித்தால் பரீட்சையில் கோட்டை! பரீட்சைக்குப் படித்தால், தவணைப் பரீட்சையில் கோட்டை! இதுதான் பிள்ளைகளின் நிலை! அம்மாமாரின் நிலை எப்பிடி இருக்கும் என்றத நினைச்சுப் பாருங்க! சில அம்மாமார் எப்ப பார்த்தாலும் பிஸி! இல்லாட்டி பிஸி மாதிரி காட்டிக்ெகாள்வாங்க. பரீட்சை முடிஞ்சோடன ரொம்ப ரொம்ப பிஸியாகிடுவாங்க! றிசல்ட் வந்தோடன அதனைவிட பிஸி. அதிலை ரெண்டு வகை இருக்கு. ஒண்டு, பிள்ளையோட றிசல்ட்டைச் சொல்றத்துக்கு. இன்னொண்டு சொல்லாம இருக்கிறத்துக்கு. போன் வந்தாலும் ஆன்ஸர் பண்ணமாட்டாங்க.
இந்த ரொம்ப என்ற சொல்லோட சரியான பிரயோகம் நிரம்ப என்பது. மட்டக்களப்பிலை பாத்திங்க எண்டா நிரம்ப என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவாங்க. நிரம்ப கஷ்டமாக பொய்த்து. அதுமாதிரி ரொம்ப பிஸி... என்றதும் உங்களுக்கு ரெலிபோன்தான் நினைவுக்கு வரும், இல்லாட்டி கவுண்டமணி வருவார்.
சில பெரோட ரெலிபோன் அடிக்கும். பாத்துப்பாத்துப் பதில் பேசமாட்டாங்க. இவன் இந்த நேரத்திலை எடுக்கிறான். விடமாட்டான். அறுவன். அது மறுமுனையில் அழைப்பவர் எப்பிடியானவர் என்பதுதான் பதில் அளிப்பதைத் தீர்மானிக்கும். பிறகு ஒரு நேரம் கேட்டால், ஐயோ நீங்க எடுத்தீங்களா? நான் ரொம்ப பிஸியா இருந்திட்டன். போன் சார்ஜ் இருக்கல்ல. என்றெல்லாம் பொய் பொய்யாப் பொழிவார்கள். இப்பிடித்தான் சமாதானக் காலத்திலை வேலை செஞ்ச ஓர் இராஜதந்திரி, எங்க போனாலும் உடன போன எடுத்துக் காதிலை வைச்சிருவார். ஆரோட கதைப்பாரோ தெரியாது! ஆனா, ஆள் பிஸி!
இன்னும் சிலருக்கு, போனுக்கு உடன பதில் சொல்லிட்டா ஏதோ கெளரவ குறைச்சல் மாதிரி! கொஞ்ச நேரம் ரிங் அடிக்க விட்டிட்டுப் பிறகு 'கர்ஜனைக் குரலில்' ஹலோ என்பாங்க. இன்னும் சிலர் பலே கில்லாடிகள்.. தங்கட வேலைக்குப் போன எடுப்பார்கள். அடுத்தவன் அவசரத்திற்கு எடுத்தால் பதில் பேசமாட்டார்கள். எனக்ெகண்டால் இப்பிடியான ஆக்களைக் கண்ணிலையும் காட்ட ஏலாது என்கிறார் நண்பர்.
பொறுப்பானவர் என்றால், கோல் எடுத்தவரும் பொறுப்பானவர் என்றால், குறைஞ்சபட்சம் மிஸ்ட் கோலைப் பாத்திட்டாவது திரும்ப எடுக்ேகாணும்தானே! அப்பிடியும் செய்ய மாட்டாங்க. சில பேர் கைபேசி என்றதை மறந்திட்டு போனை உடம்பிலை எங்கெங்கெல்லாமோ மறைச்சு வைச்சுக்ெகாள்ளுவாங்கபோல... ஆரும் கோல் அடிச்சால் அவங்களுக்குக் கேட்காது... அப்பிடியானவங்களுக்கு எதுக்கு இந்தப் போன் எல்லாம் என்று கேட்கத்தோணுது. பிஸி இல்லாம ஆற அமர, நிதானமா வேலை செய்றவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்று மருத்துவம் சொல்லுது. அவங்களுக்குத்தான் நீண்ட நாள் வேலை செய்யவும் இயலுமாம். அதனால, ரொம்ப பிஸியா காட்டிக்ெகாண்டு பிஸியாகிப் போயிடாதீங்கோ!

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
6 + 8 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.