சிறு கதை

கிண்ணியா மஜீத் ராவுத்தர்

கோடை வெயில் அகோரம் குளத்தை நாடி பறவைகள், மிருகங்கள் வரத்தொடங்கி விட்டன. குளம் வற்றி வறண்டு கணம் வெடித்துப் போயின. பறவைகள், மிருகங்கள் எல்லாம் ஏமாந்து தன் தன் பாட்டுக்கு போயின. ஏதோ ஒரு மிருகம், யானைக் கூட்டம் மட்டும் காடேறாமல் நாடேறி பழி தீர்க்கின்றன. காரணம் அவைகளின் சரணாலயம் காடு. அவைகள் கண்டபடி அழிக்கப்படுகின்றன அதனால் அவைகள் நம்மை பழி தீர்க்கின்றன.
காடுகள் அழிக்கப்படுவதால் மழையில்லை மழையில்லா விட்டால் நீர் மட்டுமா இல்லை? புல் பூண்டு தளையில்லை, குளையில்லை மிருகங்களுக்கு உணவில்லை. காடழித்துச் செய்த பயிர்களை உணவாகக் கொள்கின்றன. நமது உணவுப் பயிர்கள் மழையின்மையாலும் அழிகின்றன, வனவிலங்குகளினாலும் அழிகின்றன. எமக்கு எங்கிருந்துவரும் பொருளாதாரம்? ஆகவே காடழிப்பதை நிறுத்தி மரம் நடுமையை துரிதப்படுத்துங்கள்” என்ற நீண்ட உரையை நிகழ்த்தினார் உரப்பசளை விநியோகிக்க வந்த அதிகாரி.
அனைவரும் ஏக கலத்தில் ஆமோதிப்பது போல் தலையசைத்தனர். நூறு ஹாஜியார் “சேர்! இனம் பெருகப் பெருகக் காடு வெட்டி குடியேறுவதை என்ன செய்யலும் சேர்!” என்றார். அதற்கும் கைதட்டி வரவேற்றனர். வந்து பறிக்கப்பட்ட பசளைகளில் அரைவாசிக்கு மேல் பசளை நூறு ஹாஜியாருக்குத்தான பதிவு, தனது மக்களின் காணிகளெல்லாம் இவரின் பெயரில்தான். மேலும் அதிகாரி தொடர்ந்து பதிலளித்தார். “அதற்காகத்தான் மர நடுகையை ஊக்கப்படுத்துகிறது. அரசாங்கம், பிற்கால சந்ததியாவது சுபீட்சமாக சீவியம் செய்ய உதவியாக மரம் நட்டப்படும் எண்ணிக்கையை விட மரங்கள் வெட்டப்படும் எண்ணிக்கை, எண்பது சதவீதத்துக்கும் மேல” இதைக் கேட்ட சபையோர் சரிதான் என்பது போல் அமைதியாகினர். அந்த அமைதிகளோடு மின்சாரக் காற்றும், வெளிச்சமும் ஓய்வெடுத்த வெக்கை பொறுக்க இயலாதவர்கள் ஹோலைவிட்டு வெளியேறத் தொடங்கினர். கூட்டம் இனிது கலைந்தாலும் ஹஜ்ஜி செய்யப் போவது பற்றிய சிந்தனை அவரின் அடுத்த வீட்டு அஸன் வீட்டையும் அவனின் கடன்காரன் நெருக்குதலையும் அவன் வீடு குறையாக இருப்பதால் அவன் குமருக்கு பேசி முடியும் கல்யாணம் தாமதமாகிறது. இடையிலே சைத்தான் நுழைந்து கல்யாணம் குளம்பி விடுமே குமர் காரியமல்லவா? அதுக்குள்ளே கடன்காரன் தொல்லை வேறு மாதம் முடிய நயக்காசுக்கு வந்து நிற்பான். நூறு ஹாஜியை உறுத்தியது “தம்பி அஸன் மூனுமாசமா நயக்காசு தரல்ல நானும் வந்து போறது அவ்வளவு அழகில்லை” சத்தமாக கேட்டார் முதலாளி.
கடன் காசுக்கு நயம் கேட்க வந்தவர். (நயம் என்ன வட்டிக்கு மறுபெயர்)
அதற்கு அஸன் “சத்தம் போடாதங்க முதலாளி நம்மட அடுத்த வீடு அல்லசலுக்கு கேட்கப் போவுது. அப்படி வெட்க ரோசம் இருந்தா என் கதையால அஸனுக்கு ரோசம் கோபம் எழுப்ப பேச்சை தூக்கினார். அதுக்குள்ள காலைச் சிற்றுண்டியும் தேநீரும் கொண்டு வந்தாக அஸனின் மகள் பிள்ளை, தேநீர் கொண்டு வந்த பிள்ளையையும் தன் மகனையும் ஜோடி போட்டுப் பார்த்தனர். “இந்தாங்க மாமா தேத்தண்ணி குடியுங்கோ என்று நீட்டி அவர் கைக்கு முதல் மனம் பாய்ந்தது. ஆனால் கை மெதுவாக கண்கள் பிள்ளையைப் பார்த்து வாங்கியது. அந்தக் காலம் நடந்ததாக கூறப்பட்ட சம்பவம் ஒன்று அஸன் நினைவுக்கு வந்தது. ஒருவர் கடன் கேட்டு வந்து முற்றத்தில் நிழல் மரம் இருந்ததும் அந்த நிழலில் நிற்காமல் வேக்காட்டு வெயிலில் நின்று கொண்டு பிச்சை கேட்பது போல கடன் காசு கேட்டாராம். கடனாளி இவரைக் கண்டதும் ஆ... ஆ... ஏன் வெயிலிலே நின்று பிச்சை கேட்பது போல கேட்கிறீங்க? வாங்க இப்படி எணலிலே இருங்கலேன் அதுக்கு அந்த கடன் கொடுத்தவர் இல்ல இந்த நிழலும் ஒங்களுக்கிட்ட கடுந்து பேசிக்கடன் கேட்பதும் வட்டியாகிவிடும் எனக்கு அதனால் வெயிலில் நின்று போறேன் என்றாராம் கடன் கேட்டு வந்தவர். இதனை அஸன் நினைத்து முதலாளியைத் திரும்பிப் பார்த்தான். அவனுக்கு வந்த சிற்றூண்டியையும் அவர் மென்று மென்றுதிண்டு கொண்டிருந்தார்.
அஸன் நினைவுக்கு வந்த சம்பவத்தை முதலாளிக்குச் சொல்ல வந்ததை சிற்றூண்டியாக மென்று விழுங்கியவன் மொதலாளி ஒங்கட கடனையும் நயத்தையும் சேர்த்து எப்படியும் தராம மௌத்தாக மாட்டன். அந்த தாவுது ஹாஜ்ஜியார் அப்சார் வீடு கட்ட என்னைத்தான் கூப்பிடுரார். முன் காசு தாரன் என்றும் சொன்னார் அதை வேங்கி ஒடனே தந்துருவன்.
ஊருல பஞ்சம் அதனால ஊடலாம் கட்டுறாங்கல்ல சின்ன சின்ன மதில் கக்கூஸ்வேலை செஞ்சிதான் எங்கட குடும்ப கனாயத்து போவுது உங்களுக்கு நயக்காசு தந்துக்குள்ள வசதிப்படல்ல. எப்படியும் இந்த மாசத்துக்குள்ள நயக்காசத்தாரன் என்றான் அஸன்.
“இப்படி செய்வோமா? அஸன் தம்பி” அஸன் மகளை தன் மகனுடன் நினைப்பு வைத்துக் கேட்டார். “எப்படி முதலாளி செல்லுங்களேன்” அஸன் கேட்டான். “என்ட மகனை ஒன்ட மகளுக்கு கட்டி வைப்போம் சொத்துப் பத்து ஒன்னும் வாணாம் வெறும் பொண்ணத்தாங்க போதும்”
என்றார் முதலாளி.
“திகீர்” என்றது அஸனுக்கு பொறுத்தவன் யா அல்லாஹ் என்ட ஏழ்மைத்தனத்தை இப்படி பலகீனமாக்கிவிட்டாயா? அஸன் மனம் வேதனையின் விளிம்பில் சொல்வது அறியாது திகைத்து நின்றான்.
“ஊட்ட புள்ளக்கிட்யல்லாம் கேட்டுப் பார்ப்போம்” என்று எழுத்தான். மனிதன்ட மனம் நோகப்படாது என்ற மனிதத் தன்மையால்” டக், என்று சும்மா போடா ஒன்ட கடனையும் நயத்தையும் தாறன்” என்று சொல்லியிருப்பான் ஆனால் அஸன் மனிதாபிமானமுள்ளவனாக இருந்தமையால் அப்படி குளிர்ந்தமான முறையில் பதில் அளித்தான். என்பது முதலாளிக்கு உறைத்திருக்கவில்லை. என்பது அஸனுக்கு விளங்கியதோ இல்லையோ முதலாளி தன் ஊமையான இதுவரை ஒரு சத்துக்கும் ஒரு வேலை செய்யாத ஒரு வேலை தெரியாத எழுத்து எழுத வாசிக்க முடியாத பேசத் தெரியாத ஊமைமட்டுமல்ல மகனுக்கும் மகளுக்கும் பிறக்கும் பேரன் பேத்திகளுக்கும் உழைத்துப் போட என்னால ஏலாது என்பதினாலும் என் மகள் அடியோட விரும்ப மாட்டாள்.
அவள் என்ன பெரிய தியாகியுமில்ல அதனால அஸன் ஒருவரிடமும் இது பற்றி வாய் திறக்கவில்லை பெருமூச்சுவிட்டார் முதலாளி கேட்டால் “வீட்டில மட்டுமல்ல வாழ்ர பிள்ளை அடியோட விரும்பால் கண்ணீர் வடிக்குது பாருங்க” என்று கதையை முடிக்க வேண்டியதுதான் என்று தனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டான்.
நூறு ஹாஜியாரும் மனைவியும் இரண்டாந் தடவை ஹஜ் செய்ய ‘நிய்யத்து்’ உறுதி செய்து கொண்டார்கள். ஏனைய எல்லோரும் காசு கட்டி விட்டார்கள். நூறு ஹாஜியார் பெயர்கள் மட்டும் பதிந்து முன் பணமாக இரண்டாயிரம் ரூபா கட்டியது தான். ஒரு நான் மதிய உணவு சாப்பிட்டவர் ஹோலுக்குள்ளே வந்தவருக்கு வியர்வை புளுக்கம் மீன் விசிறியை சுழள விட்டவர் தான் போட்டிருந்த கஞ்சிபுறாக்கு பென்னியனைக் களட்டி சாய்வு நாற்காலியில் போட்டார்.
முன்பு மக்காவுக்கு போகும் போது வழங்கிய இடுப்புப் பட்டியையும் கட்டி சாய்மானத்தில் போட்டவர் கதிரையில் அமர்ந்து சாய்ந்தார். சுழன்று கொண்டிருந்த விசிறியின் வேகத்தை ஹாஜியாரின் மனோ வேகம் சுடுமூச்சாக வெளியேறியது. விசிறி வேகம் தெரியாதது போல மூளையின் சிந்தனை வேகம் தெரியவில்லை.
என்னத்துக்காக நூறு ஹாஜியார் இப்படி தன் மனதையும், மூளையையும் போட்டு அலட்டிக் கொண்டிருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது.
சிந்தனையில் ஆழ்ந்திருந்தவருக்கு தன் மகனின் புத்தக இராக்கையின் பக்கம் கண் பார்வை விழுந்தது. “இறுதிக்கடமை ஹஜ்ஜூ” என்னும் புத்தகமே தென்பட்டது. அதைப் புரட்டி வாசித்தார். அவர் முகம் தெளிவு நிறைந்து காணப்பட்டது. அஸர் தொழுகைக்கான அதான் ஒலித்தது புத்தகத்தை இருந்த இடத்தில் வைத்துவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டார்.
அன்று இரவு புரண்டு புரண்டு கிடந்ததை கவனித்த அவரின் மனைவி என்ன நித்திர வருதுல்லயா” பெரண்டு பெரண்டு கெடக்கிங்களே என்று கேட்டார்.
“ஒன்னுமில்ல அமிசம்மா நம்ம போனமுற ஹஜ்ஜி செய்யப் போவக்களயும் மூனாவது கடமை ஸகாத்தை நெறவேத்தாமத்தான் கடைசி கடமைக்கு பேய்த்திருச்சம்.
இந்த மொறயும் அப்படித்தான் போப்பொறம் எண்டு யோசனையாக்கிடக்கு மத்தது நபி (ஸல்) அவங்க ஒரு தரம்தான் ஹஜ்ஜி செஞ்சிருக்காங்க அதால நான் வரல்ல நீ மட்டும் பெய்த்து வா” என்றார் நூறு ஹாஜியார்.
“ஹ.... ஹ.... ஹ....” அவரின் மனைவி அமிசா சிரித்தாள். சொன்னால் வேதனைப்படுவாள் என்று நினைத்த ஹாஜியார் ஆச்சரியப்பட்டார் பின் அதிசயமாக கேட்டார்.
“ஏன் சிரிக்கிரா? வியப்போடு கேட்டார். இதுக்காக இவ்வளவு துக்கப்படுறீங்க எனக்கி நீங்க தொடங்கக் கொலயே விருப்பம் இல்ல இத இப்படி ஒங்கல்ட செல்ற சொன்னா சீறிப் பாய்விங்கண்டு பயமா இருந்திச்சி நீங்கலாவே சென்னதும் எனக்கு உச்சாயமா கெடந்திச்சி அதுதான் என்ன அறியாத சிரிச்சிட்டன்” என்றாரள் மனைவி அமிசா.
“அப்ப சரி அமிசா நம்ம ஒப்ப ஒரு கொமராளி, கடனாளி, ஊடு கட்டாம இருந்து கஷ்டப்படுர ஒரு ஏழையாப்பாத்து குடும்பம்” ஸக்காத்து கடமையை முடிப்பம்.
“சரி இனிப்படுப்போம்” என்றார் அமிசா.
சுப்ஹூ தொழுகைக்கான அதான் ஒலி கேட்டதும் ஹாஜியார் வரச்செய்து கொண்டு வந்து இரும்புப் பெட்டியைத் திறந்து சாத்திப் பூட்டிச் சென்றார்.
அதிகாலைப் பொழுது இன்னும் புலர்ந்து வெளிச்சம் விடத் தொடங்கவில்லை. அஸனின் மகள் பிள்ளை முற்றத்தை கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தாள். அப்போது கேட் திறக்கும் சத்தம் கேட்டது.
வாப்பா சுப்ஹு தொழுது விட்டு வாராங்க என்று நினைத்துக் கொண்டு அசட்டையாக தன் வேலையை தன் பாட்டில் செய்து கொண்டிருந்தாள்.
“அஸன்... அஸன் தம்பி” கேட்டில் நின்று நூறு ஹாஜியார் கூப்பிட்டார். “தாரு ஹாஜியார் மாமாவா வாங்க மாமா”
“எங்க புள்ள வாப்பா?” ஹாஜியார் கேட்டார்.
“தொழப்போனவங்க இன்னும் வரல இப்ப வந்திருவாங்க வாங்க வந்து இரிங்க மாமா” என்றாள் அஸன் மகள்.
ஹஜ்ஜுக்குப் போரத்த செல்ல வந்திருக்கார் என்ற நினைப்பில்
“ஏன் மாமா என்னமும் செல்ல வேணுமா?”
“ஒன்னும் செல்ல வானாம்மா இத வாப்பாக்கிட்ட குடுங்க”
என்று சின்னப் பார்சலை நீட்டியவர் திரும்பியும் பார்க்காமல் ஒரே நடையாக சென்றார்.
வாங்க மாமா வந்து இருந்து தேத்தண்ணி குடிச்சிட்டுப் போங்க மாமா கெஞ்சி மன்றாடி கூப்பிட்டாள்.
என்ட மகன் கொஞ்சம் எளம் வயசாப்பெய்த்தான் இல்லாடி என்ட ஊட்டு மருமகளாக்கிருப்பன்” என்று தன் மனம் நிறைய எண்ணியவர் அவள் கூப்பிட்டதை காதுக்கும் எடுக்காமல் சென்றுவிட்டார். அஸன் வந்தான்
“வாப்பா ஹாஜியார் மாமா வந்தாங்க”
“ஒன்னும் செல்லல்லையா மக்காவுக்கு போறத்த செல்ல வந்திருப்பார் இருக்க செல்லல்லையா?”
“சென்னன் வாப்பா இத வாப்பாக்கிட்ட குடுங்கம்மா இண்டு நீட்டிபோட்டு ஒரே ஓட்டம் போல நடந்து பேயித்தாங்க” என்று பார்சலை நீட்டினாள்.
அதை வாங்கிய அஸன் கதிரையில் அமர்ந்து மெல்லத் திறந்து பார்த்தான். ரூபா ஐயாயிரம் தான் கட்டுகள் அதுக்குள்ளே துண்டுக் கடிதம் அதில் “முதலில் கடனை இறு ஊட்ட முடிச்சி குமர்ப் புள்ளய கல்யாணம் செஞ்சிவை” என்று இருந்தது. எண்ணிய பணத் தொகை இருவர் மக்காவுக்கு ஹஜ்ஜி செய்து செலவுக்கு போதுமான தொகை.
“யா அல்லாஹ் இப்படியான நல்ல மனிசர்களுக்காகத்தான் இந்த ஒலகத்த அழியாத வெச்சிருக்கா யா அல்லாஹ் இந்த அடியாருக்கு நூர் என்னும் பிரகாசத்தையும், மேலும் மேலும் செல்வத்தையும், நீடித்த ஆயுளையும் குடு யா அல்லாஹ்” என்று அங்கிருந்த அஸன் மனைவி இருகையேந்தி பிரார்த்தனை செய்தாள். அவளின் கண்களால் ஓடிய நீர் இரு சொக்கு புயங்களால் வழிந்தது. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
3 + 14 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.