ஆட்குறைப்புச் செய்யவேண்டிய நிலையில் சிலோன் டுபாக்ேகா நிறுவனம்

சீரீசீ நிறுவனம் (CTC) கொழும்பில் ஆட்குறைப்புச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீரீசீயின் விற்பனையில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியினை அடுத்தே இந்நிலைமைக்கு அது வந்துள்ளது.
2016 அக்டோபர் மாதம் 4 ஆம்திகதியன்று புகையிலை உறபத்திகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தும் நவம்பர் 1 ஆம் திகதியன்று பொருட்கள் மற்றும் சேவைகள் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டதைத்தொடர்ந்தும் , டுபாக்ேகா நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டின் இறுதிக்காலாண்டுப் பகுதியில், 45 சதவீதத்தினால் குறைவடைந்தது.
இது குறித்த க் கருத்தக் கூறிய டுபாக்ேகா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்றதிகாரியுமான, மைக்கெல் கோவெஸ்ட், நிறுவனத்தின் எதிர்காலத்தை நிலையாகப் பேணும் நோக்கிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
“சட்டபூர்வமான சிகரெட்டுகளு க்கான வரியினை அதிகரிக்க இலங்கை அரசு மேற்கொண்ட தீர்மானமானது கொழும்பில் எமது செயற்பாடுகளில் நேரடியான பாதிப்பனை ஏற்படுத்தியுள்ளது. நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் நாங்கள் நிலைகொண்டுள்ளோம். ஆனால் தற்போது எமது நிறுவனம் ஆட்டம் காணும் நிலையில் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதுபோன்று 2007 ஆம் ஆண்டிலும் டுபாக்ேகா நிறுவனம் ஆட்குறைப்பில் ஈடுபட்டது.
வரியதிகரிப்பு பற்றி கருத்தக் கூறிய கோவெஸ்ட் "சட்டபூர்வமான சிகெரெட்டுகளின் மீதான வரியதிகரிப்பானது பாவனையாளர்கள் சட்டரீதியற்ற சிகரெட்டுகள் மற்றும் பீடி போன்றனவற்றை நாடச் செய்துள்ளது. இது எங்கள் விற்பனையில் பாரிய பாதிப்பினை உண்டுபண்ணியுள்ளது. பாவனையாளர்கள் சட்டபூர்வமான சிரெட்டுகளுக்கு மாற்றீடாக விலைகுறைந்த பீடி, சட்டரீதியற்ற சிகரெட்டுகள் என்பனவற்றைப் புகைக்கின்றனர். கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டுப்பகுதியில் அரசானது, 10 பில்லியன் வருமானத்தினை இதனால் இழந்துள்ளது.
இது பொதுமக்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துதல், வருமானத்தினை அதிகரித்தல் போன்ற அரசின் குறிக்கோள்களை தோற்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் உற்பத்தித் திறனில் சிறந்த நிலையில் விளங்கிய நிறுவனங்களில் சீரீசீயும் ஒன்று. தற்போது சீரீசீயில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 46,000 பேர் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். அத்துடன் விவசாயம், விநியோகம், மற்றும் விற்பனை போன்ற துறைகளில் தங்கள் வாழ்வாதாரத்துக்காக சுமார் 300,000 பேர் தங்கியிருப்பதாகவும் இவர் தெரிவித்தார்.
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
13 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.