சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான சிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

இலங்கையில் 2016ம் ஆண்டுக்கான சிறந்த SME வங்கியாக கொமர்ஷல் வங்கி பிரிட்டனின் இன்டர்நேஷனல் பினான்ஸ் மெகஸின் (IFM) சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி வாடிக்கையாளர்களுக்காக குறிப்பிடத்தக்க வித்தியாசங்களை ஏற்படுத்தி அவர்களுக்கான கண்டுபிடிப்புக்கள் மற்றும் செயற்பாடுகளில் அதி உயர்தரங்களை அடைந்தமைக்காக இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.
உள்ளூர் நிதி தொழில்துறையில் உயர்மட்ட பங்களிப்புக்காக வங்கிக்கு கிடைத்துள்ள அங்கீகாரமாகவும் இந்த விருது கருதப்படுகின்றது. IFM இன் நிதிவிருதுக்கான வகைப்படுத்தலில் இது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு மற்றும் சிறந்த கூட்டாண்மை ஆளுகை என்பனவற்றையும் இது உள்ளடக்கியதாகும்.
தனியார் வங்கிப் பிரிவுக்கான கொமர்ஷல் வங்கியின் பிரதி பொதுமுகாமையாளர் சந்ரா வெல்கம இந்த விருதைபெற்றுக் கொள்ள அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு இடம்பெற்ற கோலாகலமான வைபவத்தில் இந்த விருது வழங்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து சாதனையாளர்கள் இந்த ஆண்டு IFM விருதின் போது ஸ்ரேண்டர்ட் சார்டட் வங்கி (பங்களாதேஷ்,சிங்கப்பூர்,வியட்நாம்) ANZ (சிங்கப்புூர், வியட்நாம்) பேங்க் ஒப் ஈஸ்ட் ஏஸியா (ஹொங்கொங்) பேங்க் றக்யாத் மற்றும் கெனங்கா இன்வெஸ்ட்மன்ட் பேங்க் (மலேஷியா) பேங்க் அல் பலாஹ் (பாகிஸ்தான்) OCBC (சிங்கப்பூர்) தாய்பேபியுபான் பேங்க் மற்றும் கதேயுனைடட் பேங்க் (தாய்வான்) ஹபிப் பேங்க் (பிரிட்டன்) மெரிடைம் பேங்க் மற்றும் சைகொன் கொமர்ஷல் பேங்க் (வியட்னாம்) என்பனவும் இவ்விருதை பெற்றுக் கொண்டன.
IFM இந்தவிருதுகள் பற்றி அறிவிக்கையில் புத்தாக்கம், வளர்ச்சி, நிலைத்தன்மை, சமூகத்தின் மீதான பங்களிப்பு என்பன போன்றவற்றின் அடிப்படையிலேயே விருதுக்கான இறுதித் தெரிவுகள் இடம்பெறுகின்றன.
‘இந்தத் துறையில் முக்கியமான பங்களிப்பாளர்களை அங்கீகரிப்பதற்கு அப்பால் நிதித்துறையின் கவனிக்கப்படாத பிரிவுகளில் அக்கறை செலுத்தும் நிறுவனங்களுக்கான ஒரு அங்கீகாரமாகவும் இது அமைந்துள்ளது’ என்று IFM சஞ்சிகை மேலும் அறிவித்துள்ளது.
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
18 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.