தேசிய வர்த்தக மேன்மை விருதுகளை வென்றுள்ள CDB

தேசத்தின் நிதிச்சேவைகள் துறையில் அதன் வலுவான, துடிப்பான மற்றும் நிலையான அடித்தளத்தை மீண்டும் ஒருமுறை சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி(CDB) வலியுறுத்தியுள்ளது. தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட தேசிய வர்த்தக மேன்மை விருதுகள் விழாவில் வங்கியல்லாத நிதிச்சேவைகள் துறையில் CDB தங்க விருதை வென்றெடுத்ததுடன், நிர்வாக சித்தாந்தங்களை உறுதிப்படுத்துதலில் அதன் சமரசத்திற்கு இடமில்லாத நிலைபாட்டிற்காக கூட்டாண்மை ஆட்சிமுறை மேன்மைக்கான ஒட்டுமொத்த மெரிட் விருதும் வழங்கப்பட்டிருந்தது. துறைசார் ஜாம்பவான்கள் முன்னிலையில் போட்டியிட்டு CDB வென்ற இவ்விரு விருதுகளும், நாட்டின் வங்கியல்லாத நிதிச்சேவைகள் துறையில் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தொிவு செய்யப்பட்ட பிரிவுகளில் ஒட்டுமொத்த செயற்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் தேசிய வர்த்தக மேன்மை விருதுகள் ஊடாக அங்கீகாிக்கப்படுவதுடன், வெற்றியீட்டும் நிறுவனங்கள் தொழிற்துறைக்கு முன்மாதிாியாக நிலைநிறுத்தப்படும். இந்த அங்கீகாரம் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதுடன், தரம், புத்துருவாக்கம், உற்பத்தி விருத்தி, ஆட்சி, நெறிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவையும் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்படுகின்றன. CDBஇன் தொடர்ச்சியான ஸ்திரத்தன்மை, புத்துருவாக்க திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நிரல் மற்றும் அசைக்க முடியாத ஆட்சிமுறை ஆகியவை இந்நிறுவனம் இவ்விருதுக்கு தகுதியானது என்பதை நடுவர் குழுவை ஏற்றுக்கொள்ள செய்தது.
CDB ஆனது பொருளாதார, சமூக மற்றும் சூழல் ஒழுங்கநெறிகளுடன் பொது நிதி காப்பாளர் எனும் வகையில் நிர்வாகம், கணக்கியல், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றை வலியுறுத்தி அதன் தலைமைத்துவத்தை கொண்டுள்ளதுடன், உள்நாட்டு மற்றும் உலகளவில் பல்வேறு விருது விழாக்களில் கெளரவிக்கப்பட்டுள்ளது.
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
6 + 3 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.