பண்டிகைக்காலத்தின் மகிழ்ச்சியினை கொண்டாடும் DFCC வங்கி

 புத்தாண்டின் உயிர்ப்பினை மேலும் பரப்பி அனைவருடனும் அதன் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் DFCC வங்கியானது, டிசம்பர் மாதம் முழுவதும் கொழும்பு நகரின் பண்டிகை கொண்டாட்ட சூழலுக்கு மேலும் மெருகேற்றியவாறு சிறப்பித்தது.
2016 டிசம்பர் 21 முதல் 23ம் திகதி வரை ஆர்க்கேட், சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற சுற்றுலாத்துறைக் கொண்டாட்டம் 2016 (“Tourism Fest 2016”) இன் பெருமைமிகு பங்காளராக அது விளங்கியமை குறிப்பிடத்தக்கது. பொிதும் பாராட்டப்பட்ட இந்த நிகழ்வானது சுற்றுலா மேம்பாட்டுத்துறை அமைச்சினாலும், கிறிஸ்தவ சமய விவகாரங்கள் அமைச்சினாலும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வினை 2016 டிசம்பர் 21ம் திகதி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், கிறிஸ்தவ சமய விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் கொழும்பு பேராயர். மால்கம் கார்டினல் அதி.வண. ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து, விசேட அதிதிகள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. DFCC வங்கியானது, நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற இடத்திலுள்ள நத்தார் மரங்களை அழகுபடுத்துவதற்கான அனுசரணையினையும் ஏற்றுக்கொண்டதுடன், அம்மரங்களை பளிச்சிடும் சிவப்பு மற்றும் வெள்ளி விளக்குகளால் அலங்கரித்தது.
நிகழ்வு இடம்பெற்ற ஒவ்வொரு நாளுக்குமான அங்குரார்ப்பண வைபவங்களில் முறையே தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹாின் பெர்ணாண்டோ மற்றும் விசேட செயற்திட்டங்கள் அமைச்சர் கலாநிதிசரத் அமுனுகம ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
சுற்றுலாத்துறைக் கொண்டாட்டம் 2016 ஆனது நான்கு நாட்களை உள்ளடக்கிய கிறிஸ்மஸ் கருத்தாக்கம் கொண்ட கொண்டாட்டங்களாக கரோல் இசை, பேண்ட் வாத்தியங்கள், DJ மற்றும் இசைக்கலைஞர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் வேடிக்கையும் பொழுதுபோக்கும் நிறைந்த நிகழ்வுகளாக இடம்பெற்றது. 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
8 + 1 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.