விளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

எம் பஸ்ரிப்

1973ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 25ஆம் இலக்க விiளாட்டு சட்டதிட்டத்தின் கிழ் 73 முக்கிய விடயங்களை மாற்றியமைத்து, அதில் புதிய திருத்தங்களை மேற்கொள்வது உள்ளிட்ட புதிய விளையாட்டு சட்டமூலம் மற்றம் அதன் திருத்தங்கள் தொடர்பில் விசேட பொதுக்கூட்டமொன்றை நடத்துவதற்கு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அனைத்து சங்கங்களும் உரிய திருத்தங்களை கையளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு திருத்தங்களை வழங்காத விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்கமாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடு கடந்தவாரம் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், புதிய விளையாட்டு சட்டமூலம் அடுத்தவாரம் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளோம்.
ஆனால் நாட்டிலுள்ள 60 விளையாட்டு சங்கங்களில் 10 சங்கங்களே புதிய விளையாட்டு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அறிக்கை சமர்பித்துள்ளனர்.
 

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
11 + 2 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.